×

நீர்நிலைகளில் சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றாவிட்டால் வழக்கு

பெரம்பலூர், நவ. 29: பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜெய்னுலாபுதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் செல்வக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா முன்னிலை வகித்தனர். வேளாண் இணை இயக்குனர் (பொ) ராஜசேகரன் வரவேற்றார்.கூட்டத்தில் விவசாயிகளின் விவாதம் வருமாறு:தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம்: பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு பாதிப்பால் கடந்தாண்டு பாதித்த 77,825 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.32 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகா வாரியாக எவ்வளவு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்க வேண்டும்.

களரம்பட்டி விவசாயிகளிடம் படைப்புழு தாக்கத்திற்கான இழப்பீட்டுத்தொகை, பாதித்த விவசாயி வங்கி கணக்கில் ஏற்றியதாக விஏஓ சொல்கிறார். ஆனால் பணம் இன்னும் விவசாயி வங்கி கணக்கில் ஏறவில்லை. தவறான தகவலை தரக்கூடாது. வேப்பந்தட்டை தாலுகா பெரியம்மாபாளையத்தில் சாமி பெயரில் உள்ள நிலத்திற்கான பட்டாவை நத்தமாக மாற்றப்பட்டுள்ளது. அதை மாவட்ட வருவாய் அதிகாரி விசாரித்து சரி செய்ய வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன சங்க மாநில தலைவர் விஸ்வநாதன்: குடிமராமத்து பணிகள் திட்டத்தில் பெரும் முறைகேடு நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடந்த ஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. கலெக்டர் பார்வையிட்டு குடிமராமத்து நடந்த நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாதென சமீபத்தில் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை: மாநிலத்திலேயே பால் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. பால் கொள்முதல் விலையில் 4 ரூபாய் உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டும் விலை உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்கவில்லை. ஆனால் பொதுமக்களிடம் விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.6 விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனவே பால் உற்பத்தியாளர்களிடம் லிட்டருக்கு ரூ.4 விலையை உயர்த்தி கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ்: அனைத்து அரசு அலுவலகங்களிலும் மதியம் 2 மணி வரை மட்டுமே மனுக்கள் வாங்கப்படும் என அதிகாரிகள் அறிவிப்பு செய்துள்ளனர். இது தவறான நடைமுறை. அரசு அலுவல் நேரம் முழுவதும் மனுக்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.6 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மின் இணைப்பு கொடுப்பதில் பிரச்னை காரணமாக செயல்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. கலெக்டர் தலையிட்டு இந்த மையம் விரைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு பாமாயில் சாகுபடியாளர்கள் சங்க மாநில தலைவர் துங்கபுரம் முருகேசன்: மாவட்டம் முழுக்க விஷத்தன்மை கொண்ட பார்த்தீனியம் செடி அடர்ந்து வளர்ந்துள்ளது. இதை சிறப்பு கவனம் செலுத்தி அழிக்க வேண்டும். மேலும் தனியார் உரக்கடைகளில் காம்ப்ளக்ஸ் உரம் வாங்கினால் தான் யூரியா தருவோம் எனக்கூறி காம்ப்ளக்ஸ் உரம் வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். இவ்வாறு கட்டாயப்படுத்தி உரம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். தட்டுப் பாடின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.88,376 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி: கலெக்டர் சாந்தா பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்போது 88,376 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்துக்கு மின் விநியோகம் வழங்க மின்சாரத்துறை மூலமாக ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்றார்.கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ராஜேந்திரன், மாணிக்கம், வேப்பந்தட்டை ஜெயராமன், கைகளத்தூர் ராஜூ, ராமராஜன், ராமலிங்கம், சக்திவேல் பங்கேற்றனர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை யில் 50க்கும்மேற்பட்ட விவ சாயிகள் ஒன்றுதிரண்டு, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிறு பாசன ஏரி கள், ஊராட்சிகுளங்கள் குடி மராமத்து பணிகள் செய்த தில் முறைகேடு நடந்துள்ளது. அதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வுசெய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளில் காணப்படும் வேலி கருவேலமுட் கள் அகற்றப்பட வில்ல. அவற்றை விரைந்து அகற்ற வேண்டும். 6 மாத காலமாக வழங்கப்படாத கோடை உழவு மானியத்தை விரைந்து வழங்க வேண்டும். ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொட்டரை நீர்த்தேக்கம் கட்டுமானப் பணிகள் முடி வடைந்தும், விவசாய பயன் பாட்டிற்கு கொண்டு வரப்ப ட வில்லை, அதனை விரைந்து கொண்டுவர வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டவாறு கலெக்டர் அலுவலக போர்ட்டி கோ முன்பு போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. போலீசார் அவர்களைத் தடுத்து அமைதிப் படுத்தி, கோரிக் கைகள் குறித்து குறைதீர்க்கும் கூட் டத்தில் முறையிடும்படி அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்.

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் கேமரா பதிவுகள் ஆய்வு இதற்காக போலீசார் மதன கோபாலபுரம், ஏவிஆர் நகர், ராயல்நகர், கல்யாண் நகர் ஆகிய 4பகுதிகளி லும் வீடுகளில் கடைகளில் பொறுத்தப் பட்டுள்ள சிசி டிவி கேமராக்களில் கொள் ளையர் குறித்து துப்பு கிடைக்கிறதா என காட்சிக ளை ரீவைண்ட் செய்து பார்வையிட்டு வருகின்றனர். இச் சம்பவம் பெரம்ப லூர் நகர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் எச்சரிக்கைகூட்டு கொள்ளையா?பெரம்பலூரில் கடந்த மாதம் காரில்வந்த கொள் ளையர்கள் 3 வீடுக ளில் கொள்ளையடி த்ததுபோல், நேற்று முன் தினமும், காரில் வந்து நகை, வெள்ளி விளக்கு, டிவி என அனைத் தையும் கூட்டாகக் கொள்ளை அடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது