×

உலமாக்கள் நலவாரியத்தில் 18 வயது நிரம்பியவர்கள் பதிவு செய்யலாம்

அரியலூர், நவ. 29: அரியலூர் மாவட்டத்தில் உலமாக்கள் நலவாரியத்தில் 18 வயது நிரம்பியவர்கள் பதிவு செய்து உறுப்பினராக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.உலமாக்கள் மற்றும் பணியாளர்களின் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றம் அடைவதற்காக அரியலூர் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆலிம்கள், பேஷ், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், தர்க்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷிர்க்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் 18 வயது நிறைவடைந்திருப்பின் உலமாக்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாவட்ட அலுவலகத்தில் பெற்று புகைப்படத்துடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்ப படிவத்தை பரிசீலித்து தகுதியான உறுப்பினரை இவ்வாரியத்தில் பதிவு செய்யப்படும். அடையாள அட்டை கட்டணமின்றி வழங்கப்படும். இவ்வாரியத்தில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி செலவுத்தொகை, முதியோர் ஓய்வூதியம், இயற்கை மரணம், ஈமக்கிரியை, பணியின்போது மரணம் நிகழுமாயின் விபத்து நிவாரணம் ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிக்கப்படும். எனவே தகுதியுள்ள உலமாக்கள் இவ்வாரியத்தின் மூலம் பயனடையலாம்.இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : -olds ,welfare center ,Ulama ,
× RELATED திருத்தணியில் கல்லூரி மாணவர்களின் 100...