சர்க்கரை ரேஷன் கார்டை அரிசிக்கு மாற்ற 26ம் தேதி வரை வாய்ப்பு

திருச்சி. நவ.22: திருச்சி மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை (ரேஷன் கார்டு) அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை வரும் 26ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாகவும், அல்லது நேரடியாகவும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடமும் விண்ணப்பித்து பயன்பெறலாம். பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை வரும் 26ம் தேதிக்குள் www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், அல்லது நேரடியாகவும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடமும் விண்ணப்பித்து கொள்ளலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>