திருமணமாகி 5 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை

துறையூர், நவ.22: துறையூர் அருகே புலிவலம் சரகத்தை சேர்ந்த சந்தனபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணியன், கூலித்தொழிலாளி. இவரது மகள் நிவேதா(21). இவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அதே தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த பிரவீன்ராஜ் (25) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.இந்நிலையில் இருவரும் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்பு திருப்பூரில் வசித்து வந்த நிலையில் நிவேதா தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார்.

பிரவீன்ராஜின் தாய், தந்தையர் நிவேதாவின் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டு உள்ளார்கள். இந்நிலையில் நிவேதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த புலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவேதா உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: