சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவதற்கு 26ம் தேதிக்குள் பதியலாம்

தஞ்சை, நவ. 22: சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற வரும் 26ம் தேதிக்குள் பதிவு கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பொது விநியோக திட்டத்தின்கீழ் தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் சர்க்கரை அட்டை வைத்திருப்போர் தங்களது குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சர்க்கரை அட்டை அரிசி அட்டையாக மாற்றம் செய்து தர தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதைதொடர்ந்து பொது விநியோக திட்டத்தின்கீழ் தகுதியின் அடிப்படையில் சர்க்கரை அட்டைய அரிசி அட்டையாக மாற்ற செய்வதற்குரிய மனுவை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வரும் 26ம் தேதிக்குள் www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories: