×

7 மாவட்ட மக்கள் பயன்பெறும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

பெரம்பலூர், நவ.22:காவிரி ஆற்றை கருமந்துறை வழியாக வெள்ளாற்றில் இணை த்து 7 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் திட்டத்தை உடனே நிறைவேற்றி தரவேண்டும் என பெரம்பலூர் சர்க்கரை ஆலை விவசாயி கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பங்குத்தாரர்கள் ஆலோசனை கூட்டத்தில் முக்கி யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பங்குத்தாரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (21ம் தேதி) மாலை 4 மணிய ளவில் சின்னாறு பகுதியில் செந்துறை ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், 2015-2016, 2016-2017 அரவைப் பருவத்திற்கு அரசு அறிவித்த விலை, டன் ஒன்றுக்கு ரூ.2750. இதில் ரூ.2300 மட்டுமே வழங்கி விட்டு பாக்கித் தொகை டன்னுக்கு ரூ450 ஐ இதுவரை வழங்கவி ல்லை. வரும் பேரவைக் கூட்டத்திற்குள் பாக்கித் தொகையை வழங்க வேண்டும். கரும்பு உற்ப த்தி செலவு,அதற்குமேல் 50 சதவிகிதம் கூடுதல் விலை வைத்து கரும்பு கொள்முதல் விலையை (எப்ஆர்பி) உயர்த்தி அறிவிக்க வேண் டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது. பெரம் பலூர் சர்க்கரை ஆலையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக பணி யாளர்களை நியமித்து ஆலையை பெறும் நட்டத்தி ற்கு உள்ளாக்கும் நிலை யை மாற்றி நிரந்தரப் பணி யாளர்களை உடனே நியமி க்க வேண்டுவது.

சர்க்கரை ஆலையில் இணைமின் திட்டத்திற்கு விவசாயிகளிடம் பெறப் பட்ட பணத்திற்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் பங்குப்பத்திரமாக விவசாயிகளுக்கு பேரவைக் கூட்டத்திற்குள் வழங்க வேண்டும். அரவைப் பரு வத்தில் மட்டும் மின்உற் பத்தி செய்யும் நிலையை மாற்றி ஆண்டுமுழுதும் மின் உற்பத்தியை நடத்த வேண்டுவது.வெட்டிய கரும்பை ஆலைவளாக த்தில் வந்து 24 மணி நேரத்திற்க்குள் எடை போட்டு நிறுத்த வேண்டும். எடை போட்டவுடன் சம்பந் தப்பட்ட விவசாயிக்கு குறு ஞ்செய்தி (SMS) தகவலை அனுப்பும் இணையதள வச தியை உடனே ஏற்படுத்த வேண்டும்.

நிருவனத்தின் தனது அங் கீகரிக்கப்பட்ட மூலதனத்தை 210கோடி மட்டும், அதா வது ரூ10 மதிப்புள்ள 21 கோடி பங்குகளாக உயர்த்த அரசு எடுத்திருக்கும் முடி வை வன்மையாகக் கண் டிப்பது. இந்த பங்குத் தொ கையை விவசாயிகளின் பங்காக அறிவிக்க வேண் டும் எனக் கேட்டுக் கொள் வது. பயிர் இன்சூரன்சுக்காக கட்டை கரும்பு, நடவு கரும்பு இரண்டிற்கும் கடன் வழங்கும் தொகை யில் இருந்து வங்கிகள் பிடிக்கும் தொகையை பிடித்தம் செய்யக்கூடாது.

காவிரி ஆற்றை கருமந்துறை வழியாக வெள்ளற் றில் இணைத்து 7 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குப் பயன்ப டும் திட்டத்தை உடனே நி றைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்வது. காவிரி ஆற்றை முசிறி வழியாக கல்லாற்றில் இணைக்கும் திட்டத்தை உடனே நிரைவேற்ற வேண்டுமாய் தமிழக அர சை கேட்டுக்கொள்வது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராசேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சீனிவாசன்,ராஜீவ் காந்தி கரும்பு உற் பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த வரதராஜன், பங்குத்தாரர்கள் சங்கத்தைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், பெருமாள், ஞானசேகர், இளையராஜா, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் கருப்புடையார்,செல்லக் கருப்பு,பச்சமுத்து, ராஜாராம், சுப்பிரமணியன், சரவணன் ஆகியோர் கலந் து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்