×

கலெக்டர் தகவல் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

பெரம்பலூர்,நவ.22: பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் உதவி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற வேண்டிய முறைகள் குறித்த பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Training Camp ,Assistant Officers ,
× RELATED ஹர்திக் நியமனம் பேசும் பொருளானாலும்...