×

குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர், நவ. 22: பஞ்சமாதேவி பகுதியில் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி கிராமத்தில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் முறையாக மேலாண்மை செய்வதில்லை. இதனால் அவ்வப்போது சேரும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் புகையில் சிக்கி தடுமாற்றம் அடைகின்றனர். குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி எரிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Motorists ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...