×

குடிநீர் குழாயை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் தண்ணீர் பிடிக்க முடியாமல் மக்கள் அவதி

கரூர், நவ. 22: குடிநீர் குழாயை சுற்றிலும் புதர்மண்டிக்கிடப்பதால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க சிரமப்படுகின்றனர். கரூர் டி.செல்லாண்டிபாளையத்தில் மதுரைவீரன் கோயில் எதிர்புறம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. குடிநீர் குழாயை சுற்றிலும் உள்ள பகுதியில் புதர்மண்டிக்கிடக்கிறது. புதர்களுக்கு மத்தியில் உள்ள குடிநீர் குழாயில் குடிநீர் பிடித்து வர பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். புதர்களை அகற்றி சிரமமின்றி தண்ணீர் பிடித்து வரும் கையில் ஆவன செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சேந்தமங்கலம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் தோன்றிய பள்ளம்