×

சுக்காலியூர் சாலைப்புதூரில் அடிப்படை வசதிகள் இல்லாத பொது கழிப்பறை கட்டிடம்

கரூர், நவ. 22: பொதுக்கழிப்பறை பயன்பாட்டில் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். கரூர் சுக்காலியூர் அருகே சலைப்புதூரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக இங்குள்ள கட்டடம் நன்றாக தோற்றம் அளித்தும் கூட அடிப்படை வசதிகள் செய்யப்படாத நிலை உள்ளது, நவீன கழிப்பிடம் என பெயரில் தான் உள்ளது. தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. கழிவுநீர் வெளியேற்றும் வசதி செய்யப்படவில்லை. இதனால் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலைமை தான் என பொதுமக்கள் தெரிவித்தனர். பலமுறை தெரிவித்தும் கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளாத போக்கு தொடர்ந்து வருவதாக அதிருப்தி தெரிவித்தனர்

Tags : building ,facilities ,Sukkaliyoor road ,
× RELATED காரைக்குடியில் டாப் இல்லாத டாய்லெட் கண்டுகொள்ளாத நகராட்சி