வெங்கமேடு பகுதியில் குண்டும் குழியுமான திட்ட சாலையால் கடும் அவதி

கரூர், நவ. 22: திட்டச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கரூர் வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ளது திட்டச்சாலை, இந்த சாலை பராமரிக்காததால் மோசமாக உள்ளது. கலைஞர் நகர் பகுதியில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்திருப்பதால் இருசக்கர வாகனங்கள் இந்த சாலையில் அதிகளவில் சென்று வருகின்றன. வாகனங்களின் டயர்களை பதம் பார்த்துவருகிறது.சாலையை செப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் புதிதாக சாலை அமைத்து இப்போது குடிநீர் இணைப்புக்காக அதனை பறித்து போட்டு வருகின்றனர். சாலையே போடுவதில்லை. போட்டாலும் பறித்து போட்டு விடுகின்றனர் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : road ,area ,pit road ,Venkamedu ,
× RELATED சிதம்பரம் நகரில் புதிதாக போடப்பட்ட சாலை பழுதாகும் அவலம்