×

பேருந்துகளில் மாணவர்களின் படிக்கட்டு பயணம் தொடர் கதை

கரூர், நவ. 22: கூடுதல் பேருந்துகள் இயக்காததால் படிக்கட்டு பயணத்தை மாணவர்கள் மேற்கொள்கின்றனர். கரூரில் இருந்து நெரூர், சோமூர் பகுதிக்கு பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படவில்லை. மேற்கண்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு கரூர் வருகின்றனர். இவர்கள் பஸ் பாஸ் மூலமாக வந்து செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் நகர பேருந்துகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் நிலை உள்ளது. பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இலவச பஸ் பாஸ் உரிய காலத்தில் கொடுப்பதில்லை. பள்ளி அடையாள அடையாள அட்டையைக் காண்பித்து போகலாம் என்பதையே ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறிக்கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் பள்ளி துவங்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி வந்தனர். அதுபோல வழங்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்தனர்.

Tags : bus trip ,
× RELATED கஜா துயரே மீளாத நிலையில் நெருங்குகிறது நிவர்: பதைபதைப்பில் டெல்டா மக்கள்