×

வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த பயிற்சி முகாம்

குளித்தலை, நவ. 22: குளித்தலையில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை மற்றும் கரூர் மாவட்ட தொழில் மையம், கிராமியம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து பயிற்சி முகாம் கூட்டரங்கில் நடைபெற்றது. இப்பயிற்சியை கிராமியம் இயக்குனர் டாக்டர் நாராயணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதி்ல் மாவட்ட தொழில் மையம் துணைப் பொறியாளர் எரிக்சன் கலந்து கொண்டு பேசியதாவது: பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்தும் இந்த திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான நாடு தழுவிய முகமை தான் கதர் கிராம தொழில் ஆணையமாகும். இதற்கு உற்பத்தி பிரிவிற்கு ரூபாய் 25 லட்சம் மற்றும் சேவை பிரிவிற்கு ரூ.10 லட்சம் அதிகபட்ச திட்ட அளவாகும். இதற்கான கல்வித்தகுதி உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட திட்டங்களுக்கும் சேவை பிரிவின் கீழ் 5 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் எட்டாம் வகுப்பு தேறி இருக்க வேண்டும்.

மேலும் இதற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கண்டிப்பாக தேவை. தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முடிவு பெற்ற பின்புதான் வங்கி கடனில் முதல் தவணை அளிக்கப்படும். ஏற்கனவே இரண்டு வார பயிற்சி எடுத்துக் கொண்டவர்களுக்கு மேற்கொண்ட பயிற்சி அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவைப்படும் ஆவணங்கள் என்ன? அதனை இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்? பயனாளிகள் தேர்வு முறை, வங்கி கடன் தொகை இத்திட்டத்தின் கீழ் அரசு மானியம் விற்பனை உதவி நேரடி சோதனை தொழில் குழுக்கள் இறுதியாக தகுதியற்ற தொழில்களின் பட்டியல் குறித்து விரிவாக பேசினார்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு