×

புழுதேரி வேளாண். அறிவியல் மையத்தில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

தோகைமலை, நவ. 22: தோகைமலை அருகே புழுதேரி வேளாண் அறிவியல் மையத்தில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி நடந்தது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புழுதேரியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் பரமேஸ்குமார் தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் முன்னிலை வகித்தார்.

இதில் வங்கி கடன், அரசு அளிக்கும் மானியம், வேளாண் தொழிலில் உள்ள வெற்றி வாய்ப்புகள், கறவை மாடு, நாட்டு கோழி, வெண் பன்றி மற்றும் ஆடு, தேனீ, காளான் வளர்ப்பு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பு, காய்கறி மற்றும் பழ நாற்று உற்பத்தி போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் செயல்முறை விளக்க அரங்குகளை தொழில் முனைவோர்கள் நேரில் பார்வையிட்டு பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சியில் மூத்த தொழில் முனைவோர்கள் திருச்சி சுரேஷ்குமார், நிக்ஷன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நெய்தலூர் உதவி கால்நடை மருத்துவ அலுவலர் ரமேஷ், வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். ஒருநாள் நடைபெற்ற இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Tags : Entrepreneurship Training Camp ,Science Center ,
× RELATED புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள்...