×

கேரள முதல்வருக்கு ராகுல் காந்தி கடிதம் பாம்பு கடித்து மாணவி பலி செய்திக்கு பாக்ஸ்

கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியிலுள்ள அரசு சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 5ம் வகுப்பு மாணவி ஷஹ்லா ஷெரின் வகுப்பறையில் வைத்து பாம்பு கடித்து இறந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பழமையான அந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என அறிந்தேன். எனவே கேரள அரசு உடனடியாக செயல்பட்டு அப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கேரள அரசு தேவையான நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rahul Gandhi ,Kerala ,Chief Minister ,
× RELATED அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக...