×

பெண் மாவோயிஸ்ட் அஜிதா உடல் திருச்சூரில் தகனம் குமரி மாவட்டத்தை சேர்ந்த

நாகர்கோவில், நவ.22:கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் அஜிதாவின் உடலை திருச்சூர் அருகே மின் மயமானத்தில் போலீசார் நேற்று தகனம் செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடியில் மாவோயிஸ்ட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த சேவியர் என்பவரது மகள் அஜிதா உள்பட தமிழகத்தை சேர்ந்த மணிவாசகம், அரவிந்த், கார்த்திக் ஆகிய 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அரவிந்த், அஜிதாவின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு கேரள மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது. மற்றவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு விட்டன. அரவிந்த் உடல் அடையாளம் காண முடியாத அளவில் சிதைந்து உள்ளது.

எனவே டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தான் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. அஜிதாவின் உடலை பெற்றுக்கொள்ள முதலில் ஆர்வம் காட்டிய அவரது தாயார் மற்றும் உறவினர்கள் பின்னர் மறுத்தனர். பின்னர் போட்டோ மூலம் அடையாளம் காண்பித்து உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து அஜிதாவின் உடலுக்கு இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை போலீசாரே நேற்று செய்தனர். திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட உடல் அருகே மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது. இதில் அவரது பெற்றோர், உறவினர்கள் கலந்துகொள்ளவில்லை.

Tags : Ajita ,district ,Kumari ,
× RELATED சேக்காடு ஏரியில் தொழிலாளி சடலம் மீட்பு