×

புதுக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் சாரல் மழை

புதுக்கோட்டை, நவ.22: புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான சாரல் மழை பெய்தது.
பின்னர் மதியம் பலத்த மழை பெய்தது. சுமார் 30 நிமிடத்திற்கு மேல் பெய்த இந்த மழையால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: புதுக்கோட்டை 16, ஆலங்குடி 5, திருமயம் 14.80, அரிமளம் 1, மீமிசல் 2.80, மணமேல்குடி 13, குடுமியான்மலை 15, அன்னவாசல் 13, பொன்னமராவதி 16.20, காரையூர் 20 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக காரையூரில் 20 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக அரிமளத்தில் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

Tags : Pudukkottai ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...