×

அறுந்த மின்கம்பிகளை சரி செய்ய கோரிக்கை

கந்தர்வகோட்டை, நவ.22: கந்தர்வகோட்டை அருகே வளவம்பட்டி கிராமத்திற்கு செல்லும் மின்கம்பிகள் கஜா புயலின்போது அறுந்து விழுந்தது. தற்போது வரை சீர்செய்யப்படாமலிருக்கிறது. கந்தர்வகோட்டை மின்சார வாரியம் தனது அலட்சியபோக்கை மாற்றி உடனடியாக சீர்செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. கஜா புயல் தாக்கி ஒரு வருடத்திற்கு மேலாகிறது. கந்தர்வகோட்டை அருகே வளவம்பட்டி கிராமத்திற்கு செல்லும் மின்கம்பத்தில் அம்மையன்தெருவிற்கு செல்லும் வழியில் அறுந்து விழுந்த மின்கம்பிகள் இன்றுவரை சரிசெய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் மின்சார வாரியத்தினர் அலட்சியமாக இருந்து வருகின்றனர். மின்கம்பி சரி செய்யப்படாத காரணத்தால் இன்று வரை அப்பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை.

மேலும் அப்பகுதியில் குளம் உள்ளதால் இரவு நேரங்களில் யாரேனும் குளத்தில் விழுந்து விட்டால் பெரும் ஆபத்து நேரிடக்கூடும். எனவே உடனடியாக அறுந்து கிடக்கும் மின்கம்பியை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் வளவம்பட்டி கிராமத்திற்கு செல்லும் மின்வழியில் பஞ்சர் போடப்பட்டது போல் அந்தரத்தில் இணைப்பு கம்பி ஒன்று தொங்குகிறது. அதையும் சரிசெய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
கஜா புயல் அடித்தபோது இருந்த மின்சார வாரிய பணிகள் தற்போது இல்லை எனவும், எனவே உடனடியாக மின்கம்பியை இணைத்து மின்சாரம் கொடுக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு