×

வாழவச்சனூர் வேளாண் கல்லூரியில்

தண்டராம்பட்டு, நவ.22: தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூர் வேளாண் கல்லூரியில் தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூர் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று, நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமில் வழக்கறிஞர் கருணாமூர்த்தி, தகவல் பெறும் உரிமை சட்டம், வரலாறு, விண்ணப்பம் அளிக்கும் முறை ஆகியன குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.

Tags : Vazhavachanur Agricultural College ,
× RELATED திருவண்ணாமலையில் உலக எய்ட்ஸ் தின...