×

கண்ணமங்கலம் அருகே 31.50 லட்சத்தில் கால்நடை மருந்தக கட்டிடம்

கண்ணமங்கலம், நவ.22: கண்ணமங்கலம் அருகே ₹31.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் ₹31 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிட திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். ஆர்டிஓ மைதிலி, எம்எல்ஏ தூசி கே.மோகன், முன்னாள் கவுன்சிலர் திருமால் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி டாக்டர் முத்துக்குமரன் வரவேற்றார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

Tags : pharmacy building ,Kannamangalam ,
× RELATED கண்ணமங்கலம் அருகே ஆச்சரியம்...