×

விளாத்திகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

விளாத்திகுளம், நவ.22:  விளாத்திகுளம் காமராஜர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜோதிமணி. பல ஆண்டுகளாக தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இவர் அதிமுகவில் உறுப்பினராக இருந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரன் அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கிய போது டாக்டர் ஜோதிமணி அமமுக கட்சியில் இணைந்தார். தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் நேற்று தென்காசி புதிய மாவட்டத்தை துவக்கி வைப்பதற்காக தூத்துக்குடி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டாக்டர் ஜோதிமணி அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் கடம்பூர்ராஜு, உதயகுமார், எம்எல்ஏக்கள் எஸ்பி.சண்முகநாதன், சின்னப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : VMP ,candidate ,AIADMK ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...