கருங்கடல் அருளூர் பகுதியில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டு ஆடு

சாத்தான்குளம், நவ. 22: சாத்தான்குளம் தாலுகா  ஆழ்வார்திருநகரி ஒன்றியம் கருங்கடல், பனைக்குளம், அருளூர் பகுதியில் விவசாயிகள் உளுந்து மற்றும் கடலை  பயிரிட்டுள்ளனர். தற்போது வளர்ந்து பூ பூத்து காணப்படுகிறது.  இந்நிலையில் அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து  வரும் ஆடு  வயல்வெளிக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழல் உருவாகி உள்ளது. எனவே  வனத்துறையினர் காட்டு ஆட்டை பிடித்து  வனப்பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து விவசாயி குணசேகரன் கூறுகையில், இந்த காட்டு ஆடு கடந்த 2ஆண்டுகளாக இதே பகுதியில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்கடந்தாண்டு காட்டு ஆடுகளை பிடித்து  திருச்செந்தூர்  வனப்பகுதியில் விட்டோம். மீண்டும் வந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு ஆட்டை  பிடித்து வன பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: