×

கடையம் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

கடையம், நவ. 22: கடையம் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஐசக் பாக்கியசாமி தலைமை வகித்து தமிழ் மொழியின் தொன்மையை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் மாரிச்செல்வி, தமிழ் மொழியின் இனிமையை பாரதியின் பாடல்கள் மூலம் கூறினார். தமிழ்த்துறை ஆசிரியை எமிமா வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவர்கள் பாடல், நாடகம், கவிதை, கதை கூறுதல், மாறுவேடம், நடனம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். விடுகதைகள் கேட்டு பதிலளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. தமிழ் ஆசிரியை பொன்ஜமினா நன்றி கூறினார்.

Tags : Tamil Literary Forum Festival ,Kadayam School ,
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு