×

கூடங்குளத்தில் புதிய அரசு மருந்தகம்

ராதாபுரம், நவ. 22: கூடங்குளத்தில் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் புதிய அரசு மருந்தகம் திறப்பு விழா, நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை வகித்தார். மாநில இயக்குநர் குருநாதன் வரவேற்றார். அமைச்சர் நிலோபர் கபீல், மருந்தகத்தை திறந்து வைத்து பேசினார். அமைச்சர் ராஜலட்சுமி குத்துவிளக்கு ஏற்றினார். விழாவில் நாராயணன் எம்எல்ஏ, கூடங்குளம் அணுமின் திட்ட துணை இயக்குநர் அன்புமணி, ஒன்றிய அதிமுக செயலாளர் அமலராஜா, தொடக்க காப்பீட்டு மண்டல துணை இயக்குநர் கிருஷ்ணகுமார், கூடங்குளம் முன்னாள் கவுன்சிலர்கள் சுரேஷ், துரைச்சாமி, கூடங்குளம் ஜெ. பேரவை செயலாளர் சாமுவேல், பெருமாள்சாமி கலந்து கொண்டனர். மதுரை மண்டல நிர்வாக மருத்துவர் தர்மராஜன் நன்றி கூறினார்.

Tags : Kudankulam ,
× RELATED கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்