×

கூத்தங்குழியில் நீச்சல், படகு போட்டிகளுடன் மீனவர் தினம் கொண்டாட்டம்

பணகுடி, நவ. 22: உலக மீனவர் தினத்தையொட்டி நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளான கூத்தங்குழி, கூட்டப்புளி, பெருமணல் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. அந்தந்த கிராமங்களில் மீனவர்கள், மீனவர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கூத்தங்குழியில் நீச்சல், சமையல், படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சேரன்மனாதேவி சப்-கலெக்டர் பிரதிக் தயாளன், ராதாபுரம் தாசில்தார் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். நீச்சல் போட்டியில் இடிந்தகரை இக்னேசியஸ் முதல் பரிசையும், சந்துரு 2வது பரிசையும், நிக்கோலஸ் 3வது பரிசையும் பெற்றனர். சமையல் போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக காலையில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் படகுகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை மீனவர்கள் சங்க தலைவர் எரிக்ஜூட் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Fisherman ,Swimming ,Day Celebration ,
× RELATED ஒகேனக்கல் அருகே மீனவரை தாக்கி கொன்ற...