×

தென்காசியில் 3,500 போலீசார் பாதுகாப்பு

தென்காசி, நவ. 22: புதிய மாவட்ட துவக்க விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி தென்காசியில் 3,500 போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தென்காசி புதிய மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (22ம் தேதி) துவக்கி வைத்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்கான விழா, இன்று காலை 9 மணிக்கு தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் டிஐஜி பிரவீன்குமார் அபினவ், எஸ்பிக்கள் ஓம் பிரகாஷ் மீனா, சுகுணாசிங் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

விழா நடைபெறும் இடத்தை நேற்று ஐஜி சண்முக ராஜேஸ்வரன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: தென்காசியில் முதல்வர் வருகையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு திட்டமிடப்பட்டு உள்ளது. பார்க்கிங் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் இதர வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து செய்துள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பயனாளிகளும், பொதுமக்களும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர், என்றார்.

Tags : policemen ,Tenkasi ,
× RELATED தென்காசி சங்கரன்கோவிலில் ஓட்டுநர்...