வீரபாண்டி ஒன்றியத்தில் விவசாயிகள் பேரணி

ஆட்டையாம்பட்டி, நவ.22: வீரபாண்டி ஒன்றிய வேளாண்மை துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், ஊட்டச்சத்து தானியங்கள் முக்கியத்துவம் குறித்து, முருங்கப்பட்டியில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. பேரணியில் ஊட்டச்சத்து தானியங்களான கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம் மற்றும் சிறு தானியங்களை சாகுபடி செய்யும் பருவங்கள், சாகுபடி முறைகள், அறுவடை மற்றும் மதிப்பு கூட்டுதல் ஆகியவை பற்றிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர். முருங்கபட்டி கிராம ஊராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணி சித்தர் கோயிலை அடைந்தது. வீரபாண்டி வேளாண்மை துறை உதவி இயக்குனர் நாகபசுபதி தலைமை தாங்கி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: