ஓமலூர் வட்டாரத்தில் முள்ளங்கி மூட்டைக்கு ₹400 விலை உயர்வு

ஓமலூர், நவ.22: ஓமலூர் வட்டாரத்தில் முள்ளங்கி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள டேனிஷ்பேட்டை, கஞ்சநாயக்கன்பட்டி, மூக்கனூர், பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி, கே.என்.புதூர் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் முள்ளங்கி அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆனால், நடப்பாண்டில் முள்ளங்கி குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே சாகுபடி செய்திருந்தனர். தற்போது, சாகுபடி செய்யப்பட்டிருந்த முள்ளங்கி விளைச்சல் அதிகரித்துள்ளதால், சராசரியாக 5 டன் அளவில் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் முள்ளங்கியின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 45 கிலோ எடை கொண்ட மூட்டை முள்ளங்கி ₹750  முதல் ₹800 வரை விற்பனையானது. இந்த நிலையில் நேற்று, ஒரு மூட்டை ₹1,200க்கு விற்பனையானது. இதேபோல், ஒரு கிலோ ₹16  வரை விற்பனையான முள்ளங்கி, தற்போது ₹26 என விற்பனையானது. முள்ளங்கி மூட்டைக்கு ₹400 வரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: