வெள்ளாண்டிவலசையில் டெங்கு தடுப்பு பணிகள் ஆய்வு

இடைப்பாடி, நவ.22: இடைப்பாடி அருகே, வெள்ளாண்டிவலசையில் சுகாதார துறையினர் டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர். இடைப்பாடி வருவாய் துறை மற்றும் நகராட்சி சுகாதார துறை சார்பில், டெங்கு நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு நடந்தது. சேலம் உதவி கலால் ஆணையர் அம்பயுதநாதன் தலைமையில் தாசில்தார் கோவிந்தராஜ், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் முருகன், தங்கவேலு, ஜான்விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வெள்ளாண்டி வலசை காந்தி நகரில் வீடு, வீடாக சென்று டேங்க், மினி தொட்டி, உரல், டயர் டியூப்கள் கண்டறியப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டன.

Related Stories: