×

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

கிருஷ்ணகிரி, நவ.22: ராமச்சந்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் ராமச்சந்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சரவணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜாக்குலின் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், டெங்குவை பரப்பக் கூடிய ஏடிஸ் கொசுவானது, நண்ணீரில் முட்டையிட்டு, பகலில் கடிக்கக் கூடியவை. நமது வீட்டிலும், நம் வீட்டுச் சுற்றுப்புறத்திலும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உரல்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள் போன்றவற்றை அறப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தன் சுத்தம், சுற்றுப்புற சுத்தம், காலணிகள் அணிதல், அயோடின் உப்பு பயன்படுத்துதல், காய்ச்சி வடிகட்டிய நீரை பருகுதல், கழிவறைகளை பயன்படுத்துதல் குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாதையன் விரிவாக எடுத்துக் கூறினார். முகாமின்போது தூய்மை பாரதம், சர்வதேச கைகழுவும் தினத்தன்று நடந்த ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கணித பட்டதாரி ஆசிரியை குஷ்னுமா, சுகாதார ஆய்வாளர் இக்பால்பாஷா, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Dengue Prevention Awareness Meeting ,
× RELATED மேல்நிலை குடிநீர் தொட்டிகளில்...