×

தேன்கனிக்கோட்டையில் துணிகரம் திருமண மண்டபத்திற்குள் புகுந்து ₹1.25 லட்சம் புகைப்பட கருவிகள் திருட்டு

தேன்கனிக்கோட்டை, நவ.22: தேன்கனிக்கோட்டையில், திருமண மண்டபத்திற்குள் புகுந்து ₹1.25 லட்சம் மதிப்பிலான புகைப்பட கருவிகளை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ராஜாஜி தெருவில் உள்ள தனியார்திருமண மண்டபத்தில் கடந்த 16ம் தேதி திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளை படம் பிடிப்பதற்காக தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த மாதேஷ்(28)என்பவர் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் புகைப்படம் பிடித்த கேமரா உள்ளிட்ட கருவிகளை பையில் வைத்து தூங்கியுள்ளார். அதிகாலையில் எழுந்துபார்த்த போது சுமார் ₹1.25 லட்சம் மதிப்பிலான புகைப்பட கருவிகள் வைத்திருந்த பை மாயமாகியிருப்பதை கண்டு திடுக்கிட்டார். மண்டபம் முழுவதும்தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்ததில், வாலிபர் ஒருவர் கேமரா பையை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. அந்த பதிவுகளுடன் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் மாதஷ் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் கல்யாண மண்டபத்தில் உள்ள சிசிடிவிகேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த வாலிவர் ஒருவர், இரவுஅனைவரும் உறங்க சென்ற பின்பு கேமராபையை எடுத்துச்செல்வது பதிவாகியுள்ளதை உறுதி செய்தனர். அதை வைத்துகேமரா திருடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அஞ்செட்டி சாலையில் உள்ள திருமணமண்டபத்தில் கேமரா மேன் வைத்திருந்த ₹20ஆயிரம் மதிப்பிலான சேல்போன் ஒன்றுதிருடு போனது. ஆனால், அந்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் திருட்டு ஆசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை. தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த சிலமாதங்களாக திருமண மண்டபங்களில் செல்போன், கேமரா போன்ற பொருட்கள்திருடு போவதால் லட்சக்கணக்கில் மதிப்பிலான புகைப்பட கருவிகளைகொண்ட செல்ல அச்சமாக உள்ளதாக புகைப்பட கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Theft ,Thenkanikottai ,wedding hall ,
× RELATED இப்தார் நோன்பு திறப்பு