காரிமங்கலத்தில் காந்தி திடலை சீரமைக்க கோரிக்கை

காரிமங்கலம், நவ.22:  காரிமங்கலத்தில் உள்ள காந்தி திடலை சீரமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம்-பாலக்கோடு சாலையில் காந்தி திடல் உள்ளது. இந்த வளாகத்தில் அங்கன்வாடி மையம், கலையரங்கம், பூங்கா உள்ளிட்டவை உள்ளது. இந்த திடலை பொதுமக்கள் பொழுபோக்கும் இடமாகவும் பயன்படுத்தி வந்தனர். பேரூராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்காததால், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. இரவு ேநரங்களில், மது அருந்துவது, சீட்டாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், இங்குள்ள அங்கன்வாடி மையத்தின் சுவர்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மையத்தை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் அங்கன்வாடியில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நுழைகின்றன. எனவே, காந்தி திடலில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gandhi ,
× RELATED புகார் கொடுக்க 20 கி.மீ. தூரம் ெசல்வதை...