×

இ.கம்யூனிஸ்ட்

கட்சி கூட்டம்தர்மபுரி, நவ.22: தர்மபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.  கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன், மாவட்ட செயலாளர் தேவராஜன், துணை செயலாளர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஸ்வரன், நிர்வாக குழு உறுப்பினர் கலைச்செல்வன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீட்டு பட்டியல் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது. இதை தமிழில் வெளியிட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பட்டியல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Ikamyunist ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் மறியல்