கடத்தூர் பகுதியில் 3 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்

கடத்தூர், நவ.22: கடத்தூர் பகுதியில் செயல்படும் கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், வணிக வளாகம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, பேரூராட்சி அதிகாரிகள் ேநற்று கடத்தூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட 3 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைகாரர்களுக்கு ₹1000 அபராதம் விதித்தனர். மேலும், அப்பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை அகற்றினர். இதில், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாஆறுமுகம், மோகன், செந்தில் உள்ளிட்ட பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Kadathur ,area ,
× RELATED பாதாள சாக்கடை அடைப்பால் மெட்ரோ ரயில்...