×

கடத்தூர் பேரூராட்சியில் தீவிர டெங்கு ஒழிப்பு பணி

கடத்தூர், நவ.22: கடத்தூர் பேரூராட்சி பகுதியில் தீவிர டெங்கு ஒழிப்பு பணி நடந்தது. கடத்தூர் பேரூராட்சி சார்பில், தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் கடத்தூர் பேரூராட்சி 2வது வார்டு காந்திநகர், தர்மபுரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், உடைந்த பானை, தேங்காய் ஓடுகள், பழைய டயர், பிளாஸ்டிக் கேரி பேக்குகளை அப்புறப்படுத்தினர். இப்பணிகளை கடத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாஆறுமுகம், மோகன், செந்தில் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags :
× RELATED தேனி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணி