×

உலக கழிப்பறை தின கொண்டாட்டம்

பாப்பாரப்பட்டி, நவ.22:பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கழிப்பறை பராமரிப்பு, கழிப்பறையின் அவசியம், தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள், பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பாப்பாரப்பட்டி பாரதிதாசன் தெரு சந்தை மைதானத்தில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில், தீவிர துப்புரவு பணி நடந்தது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர், எழுத்தர் லதா பேகம், சுகாதார மேற்பார்வையாளர் (பொ) குமார், பணியாளர்கள் முருகன், குமார் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : World Toilet Day Celebration ,
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவாக கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்