×

திருவில்லிபுத்தூரில் குழிக்குள் விழுந்த பசுமாடுகள்

திருவில்லிபுத்தூர் நவ.22:  திருவில்லிபுத்தூரில் குழிக்குள் விழுந்த பசு மாடுகள் பத்திரமாக மீட்கப்பட்டன. திருவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெரு  பஜனை மண்டபம் பகுதியில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இந்த குழிக்குள் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் இரண்டு பசுமாடுகள் நிலைதடுமாறி விழுந்தன. பசு மாட்டின் சத்தத்தை கேட்ட அந்த பகுதி மக்கள் திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி ராஜ மாணிக்கத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ராஜமாணிக்கம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி இரண்டு பசுமாடுகளையும் பத்திரமாக மீட்டனர்.

Tags : pit ,Tiruvilliputtur ,
× RELATED உயிர் பலியை தடுக்க கூழாங்கல் ஆற்றில் பாறை குழியை மூடும் பணி