×

ராஜபாளையம் அருகே ஆழ்துளை கிணறு மூடப்பட்டது

ராஜபாளையம், நவ.22:  ராஜபாளையம் அருகே திறந்து கிடந்த ஆழ்துளை கிணறு தினகரன் செய்தி எதிரொலியாக மூடப்பட்டது.
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டில் கீரதோட்டம் பகுதியில் பெண்கள் சுகாதார வளாகத்திற்கு பயன்படும் வகையில், பல வருடங்களுக்கு முன் ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன் ஆழ் துளை கிணற்றில் தண்ணீர் வற்றியது. எனவே இதில் இருந்த மோட்டாரை அகற்றி விட்டு வேறு இடத்தில் புதியதாக போர் அமைக்கப்பட்டு சுகாதார வளாகம் இயங்கி வருகிறது. ஏற்கெனவே இருந்த பழைய ஆழ் துளை கிணற்றை முறையாக மூட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. குழந்தைகள் விழும் அபாயம் நிலவுவதாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் நேற்று திறந்த நிலையில் இருந்த குழாயை பிளாஸ்டிக் மூடி கொண்டு அடைத்தனர். அதற்கு மேல் பகுதியில் கற்களை பரப்பி, குழாய் இருந்த இடம் தெரியாமல் மண்ணை கொண்டு மூடி வைத்தனர். இதனால் நீண்ட நாட்களாக இருந்த ஆபத்து விலகியதாக செட்டியார்பட்டியை சேர்ந்த பொது மக்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்று திறந்த நிலையில் இருக்கும் ஆழ் துளை கிணறுகளை கண்டறிந்து, முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!