உள்ளாட்சி தேர்தல் அதிமுக ஆலோசனை கூட்டம்

திருச்சுழி, நவ.22:  நரிக்குடி கிழக்கு  மற்றும் மேற்கு ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுக ஆலோசனைக்கூட்டம் ஆனைக்குளம் மற்றும் நாலூர் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றியத்தில் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர்  மச்சேஸ்வரன், கவிதா தலைமையில்  கட்சி தொண்டர்கள்  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  ராஜவர்மனுக்கும் வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை  தலைவர் சரவணன், மாநில துணை செயலாளர் போக்குவரத்து பிரிவு வீரேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் கௌதமராஜா, அனைத்து கழக ஒன்றிய செயலாளர்களான  எம்ஜிஆர் மன்ற ஜெயச்சந்திரன், ஒன்றிய அம்மா பேரவை வீரபாண்டி, எம்ஜிஆர் இளைஞரணி வீரமணிகண்டன், ஒன்றிய மகளிரணி விஜய தீபா, ஒன்றிய மாணவரணி வேல்முருகன், ஒன்றிய  சிறுபான்மை நலப்பிரிவு அப்துல் ராஹிம், விவசாய பிரிவு வேல்சாமி, மீனவரணி போஸ், இலக்கிய அணி வேல்சாமி, ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணி குணசேகரன், இளைஞர் இளம்பெண் பாசறை ஞானப்பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Elections ,Advisory Meeting ,AIADMK ,
× RELATED உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயார்