×

உள்ளாட்சி தேர்தல் திமுக.வினர் விருப்ப மனு வழங்கல்

அருப்புக்கோட்டை நவ.22:  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் திமுகவினர் விருப்பமனு கொடுத்து வருகின்றனர். அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், தெற்கு மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது, இளைஞரணி கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் ரமேஷ், நகரச் செயலாளர் மணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் சிவசங்கரன், மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சோலையப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு மைதீன்பாட்சா உட்பட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Tags : Election ,DMK ,
× RELATED தேர்தல் பணிகளை திமுகவினர் உடனே தொடங்க வேண்டும்