×

புதிய நிர்வாகிகள் தேர்வு

ராஜபாளையம், நவ.22: ராஜபாளையம்  வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வட்ட கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், ராமநாதன் ஜெயராஜ் வட்டாட்சியர் ஆனந்தராஜ், துணை வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், அருளானந்தம், காளிராஜன் ஆகியோர்  முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர். இதில் வருவாய் ஆய்வாளர் தலைவராக முத்துராமலிங்கம், முதன்மை நிலை வருவாய் ஆய்வாளர் துணை தலைவராக ஜோதி, முதன்மை நிலை வருவாய் ஆய்வாளர் செயலாளராக சசிக்குமார், பொருளாளராக தங்கபுஷ்பம், இளநிலை வருவாய் ஆய்வாளர் மாவட்ட செயற்குழு  உறுப்பினராக சரவணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினராக அலுவலக உதவியாளர் கோவிந்தசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Select New Administrators ,
× RELATED முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு