கஞ்சா விற்றவர் கைது

சாத்தூர், நவ.22:  சாத்தூர் அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார். சாத்தூர் அருகே அமீர்பாளையம் முருகன் தியேட்டர் பின்புறம் வைத்து கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சாத்தூர் தாலுகா போலீசார் அதேபகுதியை சேர்ந்த சுப்பையா(77) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.ஆயிரத்து 100ஐ பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ஓட்டலுக்குள் புகுந்து வாலிபருக்கு வெட்டு