×

கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு அணையில் குளிக்க தடை

போடி, நவ. 22: மேற்கு தொடர்ச்சி போடி பகுதியில் பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மூக்கறை பிள்ளையார் அணையில் யாரும் குளிக்கக் கூடாது என என தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையான போடிமெட்டு, டாப்ஸ்டேஷன், சென்ட்ரல், முதுவாக்குடி, முட்டங்கள், கொழுக்குமலை, குரங்கணி, கொட்டகுடி போன்ற மலைப்பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
இதனால் நீர்வரத்து அதிகரித்து ஆங்காங்கே மலைகளில் பெருக்கெடுத்து வரும் ஓடைகளும் சேர்ந்து சாம்பாலாறு தடுப்பணையைத் தாண்டி மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளமென நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால் போடி முந்தல் சாலையில் உள்ள மூக்கறை பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அணையில் குளிக்க, துணி துவைக்ககூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : river ,Kotagudi ,
× RELATED இரண்டு நாள் தொடர்மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு