×

மூணாறில் காட்டுமாடு தாக்கி 2 பெண்கள் படுகாயம்

மூணாறு, நவ.22: மூணாறில் பழங்குடி மக்கள்  இடமலை குடி பகுதியில் அதிகம் வசிக்கின்றனர். கிழவழப்பாறை செட்டில்மென்ட் குடியில்  நேற்று முன்தினம்  ராதிகா (19) மற்றும் காளியம்மாள் (32)  தோட்டத்தில் ஏலக்காய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது ஏலக்காய் தோட்டத்திற்குள் திடீரென நுழைந்த காட்டுமாடு இருவரையும் விரட்டி தாக்கியது.  இதில் காட்டு மாடு குத்தியதில் காளியம்மாவின் வலது கை உடைந்தது. இதனால் அச்சமடைந்த  இருவரும்  மறைவான இடத்திற்கு ஓடி ஒளிந்தனர். சம்பவம் குறித்து அறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள் ,பொதுமக்கள்  படுகாயம் அடைந்த இருவரையும்  மீட்டு  மூணாறு தனியார் பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூணாறில் தற்போது காட்டுயானைகள் நடமாட்டம் ஒருபுறம் இருக்க, காட்டுமாடுகள் மற்றும் காட்டு பன்றிகள் தாக்குதலினால் பொதுமக்கள் கடும் பீதியி–்ல் உள்ளனர்.

Tags : forest fire ,Munnar ,
× RELATED பெண்களுக்கு சொத்துரிமை ஜி.கே.வாசன் வரவேற்பு