×

மாநில கபடி, நீச்சல் போட்டிகளுக்கு ஹயக்ரீவா வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர்வு

வருசநாடு, நவ.22: தேனியில் மாவட்ட அளவில் நடந்த கபடி மற்றும் நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு கடமலைக்குண்டு ஹயக்ரீவா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.
தேனி மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் பெண்கள் சீனீயர் பிரிவில் வென்று  மாநில அளவில் விளையாட இப்பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் இதே போல மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் வென்று மாநில அளவில் 18 மாணவர்கள் தகுதி பெற்றுள்னர். இவர்களை பள்ளி தாளாளர் குமரேசன் மற்றும் பள்ளி முதல்வர் பார்வதி பாராட்டி  பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.

Tags : Hayagriva Vidyalaya School ,State Kabaddi and Swimming Competitions ,
× RELATED மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகியது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி