×

தேனி கலெக்டர் அதிரடி உத்தரவு மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி

போடி, நவ. 22: போடி புதுகாலனி தி பைஸ் வாலி பப்ளிக் பள்ளியின் சார்பாக மாணவர்களுக்கு வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் போடி பரமசிவன் மலை அடிவாரப்பகுதியில் உள்ள வேளாண்மை பண்ணைக்கு சென்று பயிற்சி பெற்றனர். இதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சபானா பர்வின் தலைமை வகித்தார், பள்ளி செயலாளர் ராஜா வரவேற்றார். வேளாண் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர் ராஜபாண்டியன் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். மக்கள் தொடர்பு அதிகாரி மருதுபாண்டியன் பயிற்சி பெற்றவர்களை வாழ்த்தினர்.

Tags : Theni Collector Action Directing Agriculture Training for Students ,
× RELATED செக் மோசடி வழக்கில் மின்சார வாரிய...