×

வட்டார வளர்ச்சி அதிகாரிகள் 17 பேர் திடீர் இடமாற்றம்

உத்தமபாளையம், நவ.22: உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதை முன்னிட்டு 17 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் வட்டாரவளர்ச்சி அதிகாரிகள் 17 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு: மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய திருப்பதி முத்து
பதவி உயர்வு பெற்று பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய எபி கம்பம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் (கி.ஊ), உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கோதண்டபாணி பதவி உயர்வு பெற்று வட்டார வளர்ச்சி அலுவலராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு மாற்றப்பட்டார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றிய தனலட்சுமி,  சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் (கி.ஊ), சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய பாண்டியன் வட்டார வளர்ச்சி அதிகாரி (கி.ஊ), அதே பொறுப்பில் உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டார். உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரி (கி.ஊ) மலர்விழி இடமாற்றம் செய்யப்பட்டு கம்பம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக (வ.ஊ) மாற்றப்பட்டார்.
கம்பம் ஒன்றிய வட்டாரவளர்ச்சி அதிகாரி(வ.ஊ), நாகராஜ் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், உத்தமபாளையம் ஒன்றியத்தில் பணியாற்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி (வ.ஊ) பாரதமணி தேனி ஒன்றிய வட்டாரவளர்சி அதிகாரியாகவும் (கி.ஊ) மாற்றப்பட்டார். தேனி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி (கி.ஊ) பணியாற்றிய ஜெகதீஸ் சந்திரபோஸ், அதே ஒன்றியத்தில்  வட்டாரவளர்ச்சி அதிகாரியாகவும் (வ. ஊ), தேனி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய மீனம்மாள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வளர்ச்சி பிரிவிற்கும் மாற்றப்பட்டார். மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் வளர்ச்சி பிரிவில் பணியாற்றிய முத்துப்பாண்டி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய வட்டாரவளர்ச்சி அதிகாரியாகவும் (வ.ஊ), பெரியகுளம் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன்
சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் (வ.ஊ.)  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெகதீசன், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கண்காணிப்பளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய ஞானதிருப்பதி  பதவி உயர்வு பெற்று வட்டார வளர்ச்சி அதிகாரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு மாற்றப்பட்டார்.
சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய துணை வட்டாரவளர்ச்சி அதிகாரி ஜெயகாந்தன் பதவி உயர்வு பெற்று ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அதிகாரி (கி.ஊ.)  ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வட்டாரவளர்ச்சி அதிகாரியாக (கி.ஊ), பணியாற்றி ரெங்கராஜன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி (வ.ஊ), சாந்தி அதே ஒன்றிய அலுவலகத்தில் (கி.ஊ) வட்டாரவளர்ச்சி அதிகாரியாகவும்,  அங்கு வட்டாரவளர்ச்சி அதிகாரியாக (கி.ஊ) பணியாற்றிய சுரேஷ் வட்டாரவளர்ச்சி அலுவலராக (வ.ஊ) மாற்றப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக பொறுப்பு ஏற்றுகொள்ளுமாறு கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
× RELATED மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா