×

திமுகவினர் விருப்பமனு

கூடலூர், நவ. 22: இரண்டாம் நிலை நகராட்சியான கூடலூரில் 21 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் கூடலூர் நகராட்சித் தலைவர் பதவி மற்றும் கவுன்சிலர் பதவியில் போட்டியிடுவதற்காக திமுக சார்பில் கூடலூரில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் லோகந்துரை மனுக்களை பெற்றனர். நகராட்சித் தலைவர் பதவி போட்டிக்கு கட்சிப் பிரமுகர் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சொக்கர், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின் மற்றும் சுரேஷ் ஆகியோரும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு சுமார் 50 பேருக்கு மேற்பட்டோரும் விருப்பமனு அளித்தனர். முன்னாள் நகராட்சி தலைவர் சின்னாத்தேவர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொன்.விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்...