×

மேரி மாதா கல்லூரி தரவரிசையில் முதலிடம்

தேவதானப்பட்டி, நவ. 22: தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டியில் உள்ள மேரிமாதா கல்லூரி பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
மேரிமாதா கல்லூரி  மதுரை காமராசர் பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. உணவக அறிவியல் மற்றும் மேலாண்மைத்துறையில் பல்கலைக்கழக தரவரிசையில் பட்டியலில் மேரிமாதா கல்லூரி மாணவி விக்டேரியா ராணி முதலிடம் பிடித்தார். மாணவன் ரமேஷ் மூன்றாம் இடம் பிடித்தார்.
சென்ற  கல்வியாண்டில் வெளியிடப்பட்ட தரவரிசையில்  மேரிமாதா கல்லூரி பல்வேறு துறைகளில் 11 இடங்களைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. கல்லூரி முதல்வர் ஐசக் பரிசளித்து  மாணவர்களிடம் பேசுகையில், ``மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் ஆசிரியர்களின் தன்னலமற்ற வழிகாட்டுதலும் இது சாத்தியமானது. நகர்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இணையான திறமைகளை வளர்த்துக்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Mary Mata ,
× RELATED பென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு...