×

மூணாறில் லாக்காடு கேப் சாலையை சீரமைக்க வலியுறுத்தி இ.கம்யூனிஸ்ட் தர்ணா

மூணாறு, நவ.22: மூணாறில் லாக்காடு கேப் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தேவிகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு  தர்ணா போராட்டம் நடத்தினர்.
மூணாறில் இருந்து தேனி, மதுரை செல்லும் லாக்காடு கேப் சாலை மண்சரிவு  காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சூரியநல்லி, சின்னக்கானல் பகுதியில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் தேவிகுளம்  மற்றும் மூணாறு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூணாறு மண்டல தலைவர்களான  பழனிவேல், முத்துப்பாண்டி, அவுசப், குருநாதன் போன்றவர்களின் முயற்சியால்  சிக்னல்  பாயிண்ட், ஓடிகே தேவிகுளம் வழி சின்னக்கானல் சென்றடைய திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு அரசும் அனுமதி அளித்தது. ஆனால், கேடிஹச்பி  நிறுவனம் தடை உத்தரவு பிறப்பித்ததன் மூலம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்த  முடியாமல் போனது.
எனவே, இந்த திட்டத்தை இடுக்கி  எம்பி, தேவிகுளம் எம்எல்ஏ ஆகியோர் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்  என்றும், பழுதடைந்துள்ள நெற்றிக்குடிசாலை, சைலென்ட்வாலி, சிட்டிவாரை, பழத்தோட்டம், மாட்டுப்பட்டி - டாப் டிவிஷன், கல்லார், நல்லதண்ணி, லட்சுமி, மாங்குளம் கடலார் சாலைகளை உடனே சீரமைக்க  வலியுறுத்தி நேற்றுமுன்தினம் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியினர்  தேவிகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா செய்தனர். கட்சியின் மூணாறு மண்டல  செயலாளர் பி.பழனிவேல் துவக்கி வைத்தார். பி.முத்துப்பாண்டி, குருநாதன், முருகன், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : E-Communist Darna ,Munnar ,Lockad Cape Road ,
× RELATED மூணாறில் தேயிலை தோட்டம் வாங்கி...